நம் பள்ளி வரலாறு
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட 1919 ஆம் நுற்றாண்டில், இந்திய திருநாட்டின் தென் கோடியாம் தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்களுக்கான கல்விக்கண் திறந்தவர் தான் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சாராள் தக்கர் என்ற உடல் ஊனமுற்ற பெண்மணி. இவரது தியாகச் சிந்தையாலும், ஜெபத்தாலும், இந்தியப் பெண்களின் பரிதாப நிலையை மாற்ற வேண்டும் என்ற நன்நோக்கத்தாலும், உருவானதே இப்பள்ளி. அவரது சகோதரர் அருள்திரு. ஜாண் டக்கர் அவர்களின் உதவியுடனும், அவரது நண்பர்களின் ஆதரவுடனும், 1858 ஆம் ஆண்டு பெருமைவாய்ந்த சாராள் தக்கர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1867 ஆம் ஆண்டு சாராள் தக்கர் துவக்கப்பள்ளி என்ற பெயரில் 1 முதல் 3 வகுப்புகள் அருள்திரு. எட்வர்ட் சார்ஜென்ட் ஐயர் அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் Lower Secondary என 4 முதல் 8 வகுப்புகளுடன் இயங்கத் தொடங்கியது. 1867-ல் Rev. A.H. Lash அவரது துணைவியார் Mrs. Lash அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி வேகமாக வளர்ந்தது. 1890 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
அன்றைய நற்செய்திப் பணியாளர்களான A.J. ஆஸ்க்வித், பிளாரன்ஸ் சுவைன்சன், M.L. பாசன், R.E. ஹவார்டு, E.M. சேம்பர்ஸ், N.H. ஹுவிட், அனி லின்சி ஆகியோரின் அயராத உழைப்பால் இப்பள்ளி வளர்ந்து பெருகியது. பள்ளியின் ஜீவத்தண்ணீர் சிற்றாலயம் 1897 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி மங்கலபடைப்பு செய்யப்பட்டு, முதல் ஆராதனை நடத்தப்பட்டது . 1900 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் இன்றைய High School Block அரசுப் பிரதிநிதி கர்சன் பிரபு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்று தான் நம் பள்ளியின் பொன்மொழியாக "அழிவில்லாத ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" என்பது கொடுக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு செல்வி வால்ஃபோர்ட் அம்மையார் அவர்களால் சாராள் தக்கர் பள்ளியின் முன்னாள் மாணவியர் சங்கம் (STOGA) உருவாக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு மேனிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டு, செயல்படத் தொடங்கியது. இன்று 4528 மாணவியரைத் தன்னகத்தே கொண்டு திறம்பட இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் இயங்கும் இரண்டு விடுதிகளிலும் ஏறத்தாழ 400 க்கும் அதிகமான மாணவியர் தங்கிப் பயின்று வருகின்றனர். சுமார் 160 ஆண்டுகளைக் கடந்து கல்விப்பணி மற்றும் சமுதாயப்பணி ஆற்றி வரும் இப்பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் பள்ளியாகும்.
Courses Offered
GROUP-I
- Physics, Chemistry. Computer Science, Maths - E.M.
- Physics, Chemistry, Biology. Maths - E.M.
- Physics, Chemistry, Biology, Maths - T.M.
- Physics, Chemistry. Home Science, Maths - T.M.
GROUP-II
- Physics, Chemistry, Botany, Zoology - T.M.
- Physics, Chemistry, Biology. Micro Biology – T.M.
- Physics, Chemistry, Biology. Nutrition & Dietetics T.M.
GROUP-III
- Computer Application, Economics, Commerce, Accountancy – T.M.
- Economics, Commerce, Accountancy, Business Maths - E.M.
- Geography, History, Economics, Advanced Tamil – T.M.